அரியலூரில் வீட்டின் அருகில் சாராயம் காய்ச்சிய இரண்டு பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் . அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தங்குழி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் இணைந்து சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சி கொண்டிருந்த சக்திவேல் மற்றும் மணிகண்டனை கையும் களவுமாக […]
