தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த மே மாதம் குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டது. சுமார் 5313 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என நடத்தப்படும் நிலையில், முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற முறையில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். […]
