கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் +2 மாணவி தற்கொலை செய்த வழக்கு தொடர்பாக மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்த போராட்டத்தின் போது, காவல்துறையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பலர் காயமடைந்தனர். இந்நிலையில் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்து வருகின்றனர். இந்த கலவரம் தொடர்பாக இன்று […]
