மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தினமும் 190 நாய்களுக்கு சிக்கன் பிரியாணியை சமைத்து உணவளித்து வருகிறார். இதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஊரடங்கு விதித்துள்ள காரணத்தினால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றன. இதனால் தெருக்களில் சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. […]
