பாகிஸ்தான் நாட்டிற்கு நிதியுதவி அளிக்க உலக வங்கி அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியில் உள்ள நிர்வாக இயக்குனர்களின் குழுவானது, சுமார் 19.5 கோடி டாலர் பாகிஸ்தான் நாட்டிற்கு நிதியுதவியளிக்க அனுமதி வழங்கியிருக்கிறது. அந்நாட்டில் மின்சார விநியோகத்தை அதிகரிப்பதற்கும், நுகர்வோரின் சேவை தரத்தை உயர்த்துவதற்கும், இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இது மட்டுமல்லாமல், எரிசக்தி துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கும் நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகத்தை சரியாக நிர்வகிக்க, மின் கட்டண நம்பகத் தன்மையை அதிகரிக்க மற்றும் […]
