விஜய் சேதுபதி- நித்யா மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மார்க்கோனி மத்தாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து அவருக்கு மலையாளத்திலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்து.வி.எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’19 (1)(a)’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். […]
