மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. மெக்சிகோ நாட்டில் மிகவும் முரண்பட்ட பகுதிகளில் ஒன்றாக டோராகலின்ட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை பல போதை பொருள் கடத்தல் கும்பல்கள் சென்றவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் குரேரோ மாகாணத்தில் டோடோலாபான் நகரத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் நகரத்தின் மேயர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் […]
