பொதுமக்களை பயமுறுத்திய முதலை 18 தினங்களுக்கு பிறகு வலையில் சிக்கியது. மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகில் வரதம்பட்டு கிராமத்தில் ஓமக்குளம் அமைந்துள்ளது. இந்த குளம் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு கடந்த 12ஆம் தேதி ஒரு முதலை பாலாற்றின் வழியாக வந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் வருவாய்த்துறை, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், சீர்காழி வனசரக அலுவலர் ஜோசப் டேனியல் ஆகியோர் குளத்திற்கு சென்று மூன்று […]
