அமெரிக்காவில் 18 கோடிக்கும் மேற்பட்டோர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திவிட்டதாக அரசு அறிவிப்பு. உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனால் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மக்களுக்கு மாடர்னா, பைசர் மற்றும் ஜான்சன் & ஜான்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகளையே பெருமளவில் செலுத்துகின்றனர். மேலும் அதிகளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்வருகின்றனர். […]
