வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல பேரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர், மதுரை மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல பேர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்திருந்தனர். அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி மருதமலை ரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இது வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனமாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனம் சிங்கப்பூருக்கு வேலைக்கு ஆட்களை எடுப்பதாக […]
