பஜாஜ் நிறுவனமானது ஏ.பி.எஸ். வசதியுடன் தயாரிக்கப்பட்ட பல்சர் NS160 பைக்கின் இந்திய விலையை நிர்ணயம் செய்துள்ளது. தற்போது இளைஞர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கும் வாகனமாக பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் என்.எஸ்.160 மோட்டார்சைக்கிள் உள்ளது. தற்போது இந்நிறுவனம் இந்த வாகனத்துடன் ஏ.பி.எஸ். வசதியை சேர்த்துள்ளது.இந்த பல்சர் என்.எஸ் 160 மாடலில் புதிதாக ஏ.பி.எஸ். வசதி பொறுத்தப்பட்டது தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த பைக்கில் 160.3 cc திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 15.5 HP திறனை 8,500 RPM வேகத்திலும், 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை […]
