தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த 6 நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. அதில் பூண்டி ஏரியில் இருந்து 18 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் மணலி புதுநகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் எதிரில் உள்ள லட்சுமி […]
