லாரி-வேன் நேருக்கு நேர் மோதியாதில் டிரைவர் உள்பட தொழிலாளர் சங்கத்தினர் என 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலூர் சுங்கசாவாடியை மாற்ற வலியுறுத்தி வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புகுழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்(64), பாலசுப்பிரமணி(45), வீரபாண்டி (42), குருசாமி(37), பழனிசாமி(53), மாடசாமி (30), முருகன்(54), சந்தன குமார்(34), இசக்கிமுத்து(32), மாயக்கண்ணன்(37), ஸ்ரீராம்(27), பழனிசெல்வம்(41), முருகன்(52), மதுசூதனன்(43) ஆகியோர் பங்கேற்றனர். […]
