லிபியாவில் கரை ஒதுங்கிய படகுகளில் இருந்து 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் உலக அளவில் அகதிகளின் பிரச்சனையை தீர்த்து வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் தூதரகம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது, “லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலி கப்பல் படை தளத்திற்கு வந்த 2 படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி உயிர்பிழைத்துள்ள 187 பேரை மீட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளும் செய்யப்பட்டு […]
