நைஜீரியாவில் 180 நபர்களுடன் சென்ற படகு விபத்துக்குள்ளாகி, 4 பேர் பலியானதோடு 156 பேர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டில் ஒரு படகில் சுமார் 180 பேர், கெப்பி என்ற மாநிலத்தில் உள்ள மலேலே நகரில் இருக்கும் சந்தைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் திடீரென்று படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு நபர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20 நபர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். […]
