பெரம்பலூரில் வாகன சோதனையின் போது 155 மதுபாட்டில்களை மொபட்டில் வந்த மர்ம நபரிடமிருந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்கள் அனைத்தையும் உடனடி பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளத்தில் நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த […]
