இலங்கைக்கு கடத்த முயன்ற 150 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் கடலோரக் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி மற்றும் வனசரகர் வெங்கடேசன் ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஆம்னி வேனை ஒன்றை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அதிகாரிகள் […]
