ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. அத்துடன் ஜெருசலேம் நகரம் எந்த நாட்டிற்கு சொந்தம் என்பதில் இரு நாடுகளுக்கும் அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 10 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே 11 நாட்களாக கடும் மோதல் ஏற்பட்டது. […]
