பெரம்பலூரில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பசும்பலூர் கிராமத்தில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அருண் பாண்டியன் என்ற மகன் உள்ளார். அருண்பாண்டியன் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் காசி நேற்று முன்தினம் குடும்பத்துடன் வயலுக்கு சென்றுள்ளார். காசியின் மகன் அருண்பாண்டியன் பள்ளிக்கு சென்றுள்ளார். இதையடுத்து மதிய உணவு […]
