மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை தேர்வு செய்யப்பட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு மதுரை மாநகராட்சியின் தலைமை பொறியாளரான அரசு என்பவர் தலைமையேற்று நடத்தி வந்தார். இந்த திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானத்திற்காக 30 அடிக்கு மேல் ஆழம் […]
