போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் காவல்துறையினர் அனுமந்தன்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் காவல்துறையினரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் அங்கிருந்து உடனடியாக தப்பியோடியுள்ளார். […]
