பயோலஜிகல்-இ நிறுவனத்திடமிருந்து ‘கோர்பிவேக்ஸ்’ தடுப்பூசியை தலா 145 ரூபாய்க்கு வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பயோலஜிகல்-இ நிறுவனம் ‘கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. கோவேக்சின் மற்றும் கோவிஷில்ட் தடுப்பூசிகளுக்கு அடுத்ததாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உள்நாட்டு தடுப்பூசி இதுவாகும். இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த டிசம்பர் மாதம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தது. பயோலஜிகல்-இ நிறுவனத்திடம் இருந்து 5 கோடி தடுப்பூசிகள் தலா ரூ. 145 க்கு வாங்க […]
