காங்கோ நாட்டில் பலத்த மழை பெய்ததில் வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு உண்டாகி 141 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாசாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்தது. பலத்த மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல பகுதிகளில் கடும் நிலச்சரிவு உண்டானது. இதில் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனது. […]
