சிரியாவில் இராணுவ பேருந்து மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் உள்நாட்டு போரானது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் சிரியாவின் முக்கிய பகுதியான idlib மாகாணம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் சிரியா அரசுப்படை idlib மாகாணத்தை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ரஷியா அரசின் உதவியோடு சிரியா இராணுவப்படை கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். […]
