தஞ்சையில் காரில் இருந்த கைப்பையை ,நூதன முறையில் கொள்ளையடித்த நபர்களை பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள் . தஞ்சை மாவட்டத்தில் விளார்சாலை காயிதேமில்லத் நகரின் 18வது தெருவை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவர் குடும்பத்துடன் காரின் கோவைக்குச் சென்று, நேற்று முன்தினம் இரவு தஞ்சைக்கு திரும்பினார். தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே ஹோட்டலில் சாப்பிடுவதற்காக காரை நிறுத்திவிட்டு, அவரும் அவர் சகோதரியும் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் காரி அவரது மனைவியும், தாயாரும் காரின் உள்ளே அமர்ந்திருந்தன. […]
