லாவோஸ் நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சீனாவை சேர்ந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லாவோஸ் நாட்டின் தலைநகரான வியன்டியன் நகருக்கும், லுவாங் பிரபாங் நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்றில் சீனாவை சேர்ந்த 44 பேர் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பேருந்தில் சீன சுற்றுலா உதவியாளர் ஒருவரும், லாவோஸ் நாட்டை […]
