செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்ணிடம் நூதன முறையில் 1,30,000 ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டில் உள்ள வன்னியர் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். பின்னர் அவர் பணத்துடன் வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பத்து ரூபாய் கீழே கிடக்கிறது என்று […]
