வேலூர் மாவட்டத்தில் காவலர்களுக்கு 13 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் அதிகரித்துவரும் குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கூடுதலாக சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஐந்து கார்கள் உட்பட 47 ரோந்து வாகனங்கள் இருந்த நிலையில் நேற்று கூடுதலாக 13 மோட்டார் சைக்கிள்கள் காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதை போலீஸ் சூப்பிரண்ட் ராஜேஷ் கண்ணன் தொடங்கிவைத்த நிலையில் கூடுதலாக 15 வாகனங்கள் வாங்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக கூறியுள்ளனர். […]
