இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தற்போது வரை இல்லாத வகையில் மின்தடை 13 மணி நேரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருந்த இலங்கையில், தற்போது கடும் நிதி நெருக்கடியும் பண வீக்கமும் ஏற்பட்டிருக்கிறது. மேலும் நிலக்கரி, பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றின் பற்றாக்குறையால் மின் உற்பத்தியும் தடைபட்டிருக்கிறது. தற்போது வரை தினசரி 10 மணி நேரங்கள் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் சிலோன் மின்சார வாரியத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, 13 மணி நேரங்களாக மின்தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால், […]
