ஹரியானா மாநிலமான கர்னாலில் பயங்கரவாதிகள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்களிடம் இருந்து வெடி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது. அவ்வாறு கைது செய்யப்பட்ட 4 பேரில் 3 பேர் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மீதமுள்ள ஒருவர் லூதியானாவைச் சேர்ந்த நபர் என்றும் தெரியவந்துள்ளது. இவர்களுடைய பெயர் குர்பிரீத், அமந்தீப், பர்மிந்தர் மற்றும் பூபிந்தர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக எஸ்.பி. ராம் பூனியா கூறியிருப்பதாவது “கைது செய்யப்பட்ட நபர்களிடம் […]
