அஞ்சுகிராமம் அருகே பெண் போலீஸ் ஏட்டு வீட்டில் 13 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சுகிராமம் அருகே மேட்டுக்குடியிருப்பு ரெத்தினபுரம் பகுதியை சேர்ந்த வேதமணி என்பவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி உஷா (37) கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர்.சம்பவத்தன்று வேலைக்கு செல்லும் போது வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய இரண்டு மகன்களையும் நாகர்கோவிலில் இருக்கின்ற அக்கா வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். […]
