ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் 12th Man படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் திரிஷ்யம்- 2 திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. […]
