பொறியியல் அல்லாத பாடப் பிரிவுகளுக்காக 123 படிப்புகளை ஸ்வயம் இணையத்தளத்தில் யுஜிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இளநிலை பிரிவு மாணவர்களுக்கு 83 படிப்புகளும், முதுநிலை மாணவர்களுக்கு 40 படிப்புகளும் அடங்கும். இதுகுறித்த விவரங்களை மாணவர்கள் www.ugc.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். இந்தப் படிப்புகள் அனைத்தும் வருகின்ற ஜூலை முதல் அக்டோபர் மாதத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
