பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கொரோனா காலகட்டத்திலும் 120 நாட்களில் படமாக்கியுள்ளார் மணிரத்தினம். பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளனர். […]
