தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இன்று கார்சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். மணிமுத்தாறு அணையின் கீழ் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பூங்கா விரைவில் சீரமைக்கப்படும் எனவும், இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விட்டதாக சபாநாயகர் கூறியுள்ளார். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து […]
