தமிழக பள்ளிக்கல்வித்துறை நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் ஒரு மாணவரை ஒருநாள் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாணவர் ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் தருண் ஆனந்த் என்ற மாணவர் ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப் பட்டார். இந்த மாணவருக்கு தலைமை ஆசிரியர் செய்ய வேண்டிய பணிகள் குறித்த […]
