மாநிலங்களவை எம்பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மக்களவையின் 2ஆவது நாள் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.. மக்களவை தொடங்கியதில் இருந்து 12 பேர் சஸ்பெண்ட், வேளாண் சட்டங்களை ரத்து செய்ததற்கான மசோதா விவாதம் இன்றியே நிறைவேற்றப்பட்டது போன்ற பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.. தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அதனை நிறுத்த வேண்டும் என்று சபாநாயகர் […]
