தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நேற்று முதல் துவங்கியிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 8.22 லட்சம் பேர் தேர்வெழுதுகின்றனர். அதில் குறிப்பாக 3.91 லட்சம் மாணவர்களும், 4.31 லட்சம் மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். மேலும் மாநிலம் முழுவதுமாக 3,081 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அரசு தேர்வு இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் […]
