பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப் படாத பகுதிகளிலிருந்து கேள்வி கேட்கப்படாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாள் நெருங்கிக் கொண்டு வருகின்றது. இதனால் பொதுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு தொற்று பரவலின் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. […]
