இந்தியாவில் பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜுன் 15ஆம் தேதி சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அந்தத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால் தேசப் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 116 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. […]
