நைஜீரியாவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் 110 பேர் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் மைடுகுரி என்ற நகரம் உள்ளது. அங்கு நேற்று அத்துமீறி நுழைந்த தீவிரவாத அமைப்பினர், 110 விவசாயத் தொழிலாளர்களை வரிசையாக நிற்க வைத்து, கைகளை கட்டி அவர்களின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர். அந்த விவசாயிகள் அனைவரும் வயலில் அறுவடை ஈடுபட்டிருந்த போது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தை ஐஎஸ் […]
