அமெரிக்காவில் தீம் பார்க்கிற்கு பெற்றோருடன் சென்றிருந்த சிறுமி 110 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள Glenwood Caverns Adventure என்ற பூங்காவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 வயது சிறுமியான Wongel Estifanos, தன் குடும்பத்தாருடன் சென்றிருக்கிறார். அங்கு பிரபலமடைந்த Haunted Mine Drop ride-க்கு சிறுமி சென்றிருக்கிறார். அப்போது அவர் அணிந்திருந்த பாதுகாப்பு பெல்ட் சரியாக இல்லாததால், சுமார் 110 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். […]
