மின்கோபுரத்தை தொட்டதால் 11 வயது மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ராயபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன்-மகாலட்சுமி தம்பதியினர். இவர்களுடைய மகன் யுவன் சரண் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். தற்போது விடுமுறை என்பதால் யுவன் சரண் ராயபாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தான். இந்நிலையில் யுவன் சரண் அப்பகுதியிலுள்ள மந்தை திடல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது உயர்விளக்கிற்கான மின் கோபுரம் பிடித்துள்ளான். […]
