வேன் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் 11 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் இருக்கும் உறவினர்களை சந்திப்பதற்காக ஒரு குடும்பம் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்புவதற்காக வேன் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் வந்த வேன் பஞ்சாப் மாகாணத்தில் கான்குவா டோக்ரான் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது அருகில் இருந்த மியான்வாலி கால்வாயில் கார் திடீரென கவிழ்ந்து உள்ளது. பின்னர் வேன் மெதுவாக நீருக்குள் மூழ்கியுள்ளது. […]
