புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த 30ஆம் தேதி துப்பாக்கிச்சூடு பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தஞ்சை மருத்துவமனையில் 4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின், துப்பாக்கி குண்டு அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரண கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் […]
