அமெரிக்காவில் 11 மாகாணங்களில் கட்டாயமாக முக கவசம் அணிய தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதன்படி, உலக நாடுகளும் கட்டுப்பாடுகளை பின்பற்றின. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் இருக்கும் ரோட் ஐலேண்ட், கனெக்டிகட், நிவேடா, மசாசூசெட்ஸ், கலிஃபோர்னியா, நியூஜெர்ஸி, வாஷிங்டன், டெலாவேர், நியூயார்க், ஒரீகன் […]
