டிராக்டர் டிரெய்லர் கழன்று சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் புறவழிச் சாலையில் உள்ள தோப்பில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளிகள் 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதனையடுத்து தோப்பில் இருந்த புளியம்பழங்களை சாக்கு மூட்டைகளில் கட்டிக்கொண்டு டிராக்டர் கம்பத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்த டிராக்டரை அபினேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது கம்பம் பாவலர் படிப்பகம் அருகே உள்ள சேனை ஓடையில் சென்றபோது திடீரென டிராக்டரின் டிரெய்லர் […]
