ஆஸ்திரேலியாவில், பல லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பறக்கக்கூடிய உயிரினத்தின் கீழ் தாடையின் அரிதான புதைபடிவ துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வேட்டையாடக்கூடிய உடல் திறன் கொண்ட பறக்கக்கூடிய டிராகன் போல இந்த உயிரினம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கு ‘தபுங்காகா ஷாவி’ என்று பெயரிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில், 11 கோடி வருடங்களுக்கு முன்பு, இந்த கண்டத்திலேயே மிகவும் பெரிதாக இந்த ட்ராகன் வானத்தில் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது 23 அடி நீளம் […]
