தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர், ஊழல் தடுப்பு பிரிவு இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பிரதீப்குமார், கோவை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ்பி மணிவண்ணன் சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]
