103 வயதான முதியவர் கொரோனாவில் இருந்து விடுபட்டதை அடுத்து மருத்துவ ஊழியர்கள் அவருக்கு மலர் கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இந்தியாவில் கொரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதுபோல், கேரளாவிலும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு சென்ற மாதம் முதல் வேகமாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 48,000ஐ நெருங்குகிறது. மேலும் 175 பேர் உயிரிழந்து விட்டனர். அதிலும் கோரமுக கொரோனா வயதானவர்கள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினரையும் வயது […]
